Published : 08 Nov 2022 05:13 AM
Last Updated : 08 Nov 2022 05:13 AM

காற்றின் தரம் மேம்பாடு: தொடக்கப் பள்ளிகளை நாளை திறக்க டெல்லி அரசு முடிவு

புதுடெல்லி: நாட்டின் தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் மேம்பட்டுள்ளதால் தொடக்கப் பள்ளிகளை திறக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.

டெல்லியில் காற்றின் தரம் கடந்த வாரத்தில் மிகவும் மோசமடைந்தது. பல்வேறு இடங்களில் காற்றின் தரக்குறியீட்டு எண் 450-ஐ தொட்டுள்ளது. இதனால் காற்று மிக மோசமான நச்சுத்தன்மையை எட்டியுள்ளது. குறிப்பாக, நொய்டா பகுதியில் காற்றின் தரம் மிக மோசமாகியுள்ளதால், அங்கு 8-ம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்பு எடுக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்தது.

மேலும், காற்றின் தரம் மேம்படும் வரையில் டெல்லியில் அனைத்து தொடக்கப் பள்ளிகளும் மூடப்படும். 5 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் நடந்தாலும், விளையாட்டு வகுப்பு போன்ற வெளிப்புற நடவடிக்கைகளை மேற்கொள்ள கூடாது என்று டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் உத்தரவு பிறப்பித்தார்.

இந்நிலையில், டெல்லி சுற்றுச் சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

வரும் 9-ம் தேதி (நாளை) முதல் தொடக்கப் பள்ளிகள் திறக்கப்படும். மேலும், நகரில் காற்றின் தரம் மேம்படுவதைக் கருத்தில் கொண்டு, 50 சதவீத ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்யச் சொல்லும் உத்தரவும் ரத்து செய்ப்படுகிறது.

அதே நேரத்தில் பெட்ரோலில் இயங்கும் பிஎஸ்-3 ரக நான்கு சக்கர வாகனங்கள், டீசலில் இயங்கும் பிஎஸ்-4 ரக வாகனங்களுக்கான தடை நீட்டிப்பு செய்யப்படுகிறது. இவ்வாறு அமைச்சர் கோபால் ராய் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x