

கர்நாடக மாநிலம் ரெய்ச்சூர் அருகே புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகளை ஏற்றிச் சென்ற லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது.
மைசூருவில் உள்ள இந்திய ரூபாய் அச்சடிக்கும் மையத்தில் இருந்து நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்குப் பலத்த பாதுகாப் புடன் புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரெய்ச்சூர் மாவட்டத்தில் இயங்கும் வங்கிகளுக்கு பணப்பட்டுவாடா செய்வதற்காக புதிய ரூபாய் நோட்டுகள் லாரி மூலம் ஏற்றி அனுப்பிவைக்கப்பட்டது.
இந்த லாரி சிந்தனூர் அருகே நேற்று சென்று கொண்டிருந்த போது திடீரென பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மேலும் லாரியில் வைக்கப்பட் டிருந்த பணக்கட்டுகள் நாலாபுறமும் சிதறி காற்றில் பறந்தன.
இதைக் கண்டு ஆச்சரியமடைந்த அப்பகுதி மக்கள் பணத்தை எடுக்க முண்டியடித்தனர். அதற்குள், லாரியின் பின்னால் பாதுகாப்புக்கு வந்த ரிசர்வ் வங்கி அதிகாரிகள், பொதுமக்களைத் தடுத்து நிறுத்தி, சாலையில் சிதறிய ரூபாய் நோட்டு களைப் பத்திரப்படுத்தினர்.
பின்னர் சம்பவ இடத்துக்கு வேறு வாகனம் வரவழைக்கப்பட்டு, பணம் எடுத்துச் செல்ல நட வடிக்கை எடுக்கப்பட்டது. விபத்து தொடர்பாக ரெய்ச்சூர் போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.