Published : 06 Nov 2022 01:49 PM
Last Updated : 06 Nov 2022 01:49 PM

7 சட்டப்பேரவை தொகுதிகள் இடைத்தேர்தல் |  4ல் பாஜக வெற்றி; ஆர்ஜேடிக்கு பின்னடைவு

உத்தரப் பிரதேசத்தில் பாஜக கொண்டாட்டம்.

புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தின் கோலா கோக்ராநாத் தொகுதி, ஹரியாணாவின் ஆதம்பூர், பிஹாரின் கோபால்கஞ்ச், ஒடிசாவின் தம்நகர் என 4 சட்டப்பேரவை தொகுதிகளில் பாஜக வென்றுள்ளது. பிஹாரின் மோகமா தொகுதியில் தேஜஸ்வியின் ராஷ்ட்ரீய ஜனதா தளமும், தெலங்கானாவின் முனுகொடேவில் டிஆர்எஸ் கட்சியும், மும்பை அந்தேரி கிழக்கில் உத்தவ் தலைமையிலான சிவ சேனாவும் வெற்றி பெற்றுள்ளன.

முன்னதாக 6 மாநிலங்களில் காலியாக உள்ள ஏழு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நவம்பர் 3-ல் இடைத்தேர்தல் நடைபெற்றது.
அதன்படி, பிஹாரின் மோகமா மற்றும் கோபால்கஞ்ச் ஆகிய இரு சட்டப்பேரவை தொகுதிகள், மகாராஷ்டிராவில் (கிழக்கு) அந்தேரி, ஹரியாணாவில் ஆதம்பூர், தெலங்கானாவில் முனுகோட், உ.பி.யில் கோலா கோரக்நாத் மற்றும் ஒடிசாவில் தாம்நகர் பேரவை தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (நவம்பர் 6) எண்ணப்பட்டன.

தேர்தலுக்கு முன்னர் இந்த 7 சட்டப்பேரவை தொகுதிகளில் இரண்டு பாஜக வசம், காங்கிரஸ் வசம் 2, சிவசேனா வசம் ஒன்று மற்றும் ராஷ்ட்ரீய ஜனதா தளத்திடம் ஒரு தொகுதி இருந்தது.

வாக்கு எண்ணிக்கை முடிந்த நிலையில், உத்தரப் பிரதேசத்தின் கோலா கோக்ராநாத் தொகுதி, ஹரியாணாவின் ஆதம்பூர், பிஹாரின் கோபால்கஞ்ச், ஒடிசாவின் தம்நகர் என 4 சட்டப்பேரவை தொகுதிகளில் பாஜக வென்றுள்ளது. பிஹாரின் மோகமா தொகுதியில் தேஜஸ்வியின் ராஷ்ட்ரீய ஜனதா தளமும், தெலங்கானாவின் முனுகொடேவில் டிஆர்எஸ் கட்சியும், மும்பை அந்தேரி கிழக்கில் உத்தவ் தலைமையிலான சிவ சேனாவும் வெற்றி பெற்றுள்ளன.

முதல் பலப்பரீட்சை: பிஹார் துணை முதல்வராக பொறுப்பேற்றுள்ள தேஜஸ்வி யாதவுக்கும், பாஜகவை துறந்து ஆட்சியை அமைத்துள்ள ஆளும் ஆர்ஜேடி, ஐக்கிய ஜனதா தள கூட்டணிக்கு இது முதல் பலப்பரீட்சை என்பதால் இது கவனம் ஈர்த்துள்ளது. இந்தப் போட்டியில் ஆர்ஜேடி சார்பில் கோபால்கஞ்சில் பாஜக வேட்பாளர் குசும் தேவி வெற்றி பெற்றார். மோகமா தொகுதியில் ஆர்ஜேடி வேட்பாளர் நீலம் தேவி வெற்றி பெற்றிருக்கிறார். இந்த இரு தொகுதிகளுமே இடைத்தேர்தலுக்கு முன்னர் எந்த கட்சி கைவசம் இருந்ததோ அதற்கே சென்றுள்ளது. பாஜக கூட்டணி முறிவுக்குப் பின்னர் இந்த இடைத்தேர்தலில் 2க்கு 2 என்று எதிர்பார்த்த ஆர்ஜேடிக்கு இது பின்னடைவாகவே கருதப்படுகிறது.

கட்சி தாவல் கைகொடுத்தது! ஹரியாணா மாநில முன்னாள் முதல்வரான பஜன்லாலின் குடும்பத்தின் கோட்டையாக கருதப்படும் ஆதம்பூரில் தான் இடைத்தேர்தல் முடிவு எண்ணப்பட்டு வருகிறது. இங்கு அவரின் பேரன் பாவ்யா பிஷ்ணோய் போட்டியிடுகிறார். இவர் அண்மையில் காங்கிரஸில் இருந்து பாஜகவுக்கு மாறினார். அண்மையில் பாவ்யா பிஷ்ணோயின் தந்தை குல்தீப் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். இதனால் அந்தத் தொகுதியில் இடைத்தேர்தல் அவசியமாக அங்கு தற்போது பாஜக வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அதை பூர்த்தி செய்யும் வகையில் பாவ்யா பிஷ்ணோய் வெற்றி பெற்றிருக்கிறார்.

சிவசேனாவுக்கு இது புதுசு: மகாராஷ்டிராவை பொறுத்தவரை சிவசேனாவுக்கு இது முற்றிலும் வித்தியாசமான தேர்தல். சிவசேனா சுடரொளி சின்னத்தில் சிவசேனா (உத்தவ் பாலாசாஹேப் தாக்கரே) என்ற கட்சிப் பெயருடன் தேர்தலை சந்தித்துள்ளது. ஏக்நாத் ஷிண்டே அதிருப்தி எம்எல்ஏக்களை திரட்டி பாஜக ஆதரவுடன் முதல்வர் ஆன நிலையில் இந்தச் சம்பவம் முக்கியத்துவம் பெறுகிறது. இங்கு ருஜுதா லட்கே சிவசேனா (உத்தவ் பிரிவு) சார்பில் போட்டியிடுகிறார். பாஜக இங்கு போட்டியிடவில்லை. எதிர்பார்த்தபடியே .ருஜுதா லட்கே வெற்றி பெற்றிருக்கிறார்.

உத்தரப் பிரதேசத்தின் கோலா கோகர்நாத் தொகுதியிலும் பாஜக வெற்றி பெற்றுள்ளது. தெலங்கானாவின் முனுகோட் தொகுதியில் டிஆர்எஸ் கட்சியின் குசகுண்டல பிரபாகர ரெட்டி வெற்றி பெற்றார். தன்னை எதிர்த்த பாஜக வேட்பாளரைவிட 10 ஆயிரம் வாக்குகள் அதிகமாகப் பெற்று வெற்றி பெற்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x