

ஆந்திர தலைநகர் அமரவாதியில் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் மற்றும் வங்கி அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசியது:
தற்போதைய சூழலில் மொபைல் போன், இணைய தளம் மூலமாக பணப் பரிவர்த்தனை செய்ய வேண்டியது அவசியமாகி யுள்ளது. ஆந்திராவில் 90 லட்சம் பேர் மகளிர் சுய உதவிக் குழுவில் உள்ள னர். இதில் 70 லட்சம் பேருக்கு வங்கிக் கணக்கு உள்ளது. ஒவ் வொரு குழுவிலும் ஒருவருக்கு மொபைல் போன் மூலம் பணம் பரிவர்த்தனை செய்ய பயிற்சி அளிக்கப்படும். மாநிலத்தில் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்களுக்கு மொபைல் போன் வழங்கும் திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும்.
இவ்வாறு சந்திரபாபு நாயுடு கூறினார்.