

சமூக செயற்பாட்டாளர் பெஜவாடா வில்சன், எழுத்தாளர் கே.டி. கட்டி, நடிகை லட்சுமி உள்ளிட்ட 61 பேருக்கு கர்நாடக அரசின் உயரிய விருதான கன்னட ராஜ்யோத்சவா விருது வழங்கப்படுகிறது.
கடந்த 1956-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி கர்நாடக மாநிலம் உதய மானது. இந்நாளை ஆண்டு தோறும் கர்நாடக அரசு கன்னட ராஜ்யோத் சவா (அரசு உதய தினம்) என்ற பேரில் விழா நடத்தி வருகிறது.
கர்நாடக மாநிலம் உதயமாகி 60 ஆண்டுகள் ஆனதைக் கொண்டாடும் வகையில் பல்வேறு துறைகளில் சாதித்த 61 பேருக்கு கன்னட ராஜ்யோத்சவா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதன்படி மகசேசே விருது பெற்ற சமூக செயற்பாட்டாளரும், தேசிய துப்புரவு தொழிலாளர் முன்னணியின் நிறுவனருமான பெஜவாடா வில்சன், கன்னட எழுத்தாளர் கே.டி.கட்டி, நடிகை லட்சுமி, நாடக இயக்குநர்கள் டி.ஹெச்.ஹேமலதா, உமாராணி, ஊடகவியலாளர்கள் பவானி லட்சுமி நாராயணா, ஈஷ்வர துர்வ கோட்டி உட்பட 61 பேர் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இன்று காலை பெங்களூருவில் நடைபெறும் விழாவில் இந்த விருது களை முதல்வர் சித்தராமையா வழங்குகிறார். விருது பெறு வோருக்கு ரூ. 1 லட்சம், 20 கிராம் தங்க பதக்கம், வெள்ளிக் கேடயம் பரிசாக வழங்கப்படும்.