உத்தர பிரதேசத்தை சேர்ந்த 11 வயது அறிவுஜீவி சிறுவனை 9-ம் வகுப்பில் சேர்க்க அனுமதி

யஸ்வர்தன் சிங்
யஸ்வர்தன் சிங்
Updated on
1 min read

லக்னோ: உத்தர பிரதேசம் மாநிலத்தின் கான்பூர் நகரைச் சேர்ந்த 11 வயது சிறுவன் யஸ்வர்தன் சிங். தற்போது 7-ம் வகுப்பு படிக்கும் இவன் அறிவுஜீவியாக திகழ்கிறான். லண்டனைச் சேர்ந்த ஹார்வர்டு ரிக்கார்ட்ஸ் அமைப்பு இவனை உலகின் இளம் வரலாற்று அறிஞர் என கூறுகிறது. இவனது அறிவுத் திறன் அளவு(ஐ.க்யூ) 129 என மதிப்பிடப்பட்டுள்ளது.

சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராகுபவர்களுக்கும், யஸ்வர்தன் பயிற்சி எடுக்கிறான். இவன் கடந்த மாதம் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை தனது குடும்பத்தினருடன் சந்தித்து பாராட்டு பெற்றார்.

மிகுந்த அறிவுத்திறனுடன் இருப்பதால், இவரை 7-ம் வகுப்பிலிருந்து 9-ம் வகுப்புக்கு மாற்ற உத்தர பிரசேத பள்ளிக்கல்வி வாரியம் அனுமதி வழங்கியுள்ளது. வழக்கமாக 10-ம் வகுப்பு தேர்வு எழுத குறைந்தது 14 வயது இருக்க வேண்டும். ஆனால், யஸ்வர்தன் சிங், 2024-ம் ஆண்டில் தனது 13-வது வயதில் 10-ம் வகுப்பை தேர்வை எழுதவுள்ளான். இவன் குழந்தை பருவத்தில் இருந்தே சிறப்பு திறனுடன் இருந்ததாக அவனது தந்தை அன்சுமான் சிங் பெருமிதத்துடன் கூறுகிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in