Last Updated : 01 Nov, 2016 09:27 AM

 

Published : 01 Nov 2016 09:27 AM
Last Updated : 01 Nov 2016 09:27 AM

இந்தியாவிடம் சரணடைய விரும்புகிறாரா தாவூத்?- தாய்நாட்டில் இறுதி நாட்களை கழிக்க விரும்புவதாக தகவல்

நிழல் உலக தாதாவான தாவூத் இப்ராஹிம் இந்தியாவிடம் சரண டைய விரும்புவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

1993-ம் ஆண்டு, மார்ச் 12-ம் தேதி, 260 உயிர்களை பலிகொண்ட மும்பை வெடிகுண்டு வழக்கில் தேடப்பட்டு வரும் முதல் குற்ற வாளி தாவூத் இப்ராஹிம். இத் தாக்குதலுக்குப் பிறகு நிழல் உலக தாதாவாக மாறிய தாவூத், சவுதி அரேபியாவில் ஒளிந்திருந்தார். பின்னர் பாகிஸ்தான் அரசிடம் தஞ்சம் அடைந்து கராச்சி நகரில் ரகசியமாக வசித்து வருகிறார். ஆனால் பாகிஸ்தான் இதைத் தொடர்ந்து மறுத்து வருகிறது.

2001-ம் ஆண்டு, செப்டம்பர் 11-ம் தேதி நியூயார்க் நகரில் பின்லேடன் நடத்திய தாக்குதலில் தாவூதுக்கும் தொடர்பு இருப்பதாகக் கண்டறிந்த அமெரிக்க உளவுத்துறை, தாவூதை தேடப்படும் தீவிரவாதக் குற்றவாளி யாக 2003-ம் ஆண்டு அறிவித்தது. தொடர்ந்து இந்தியாவில் நடை பெற்ற பல்வேறு தீவிரவாதத் தாக் குதல்களிலும் தாவூதிற்கு தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தாவூதை தங்களிடம் ஒப்படைக்கும் படி பாகிஸ்தானிடம் அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. இதனால் தாவூத் அமெரிக்கப் படையிடம் சிக்கி உயிரை விடுவதை விட தனது தாய்நாடான இந்தியாவுக்கு திரும்ப விரும்புவதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து ‘தி இந்து’விடம் மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறும்போது, “சவுதி அரேபியாவில் பல பினாமிகள் பெயரில் சுமார் ரூ.15,000 கோடி மதிப்பிலான சொத்துகள் தாவூதிடம் உள்ளன. இவற்றை விற்று பண மாக்கித் தரும்படி தாவூத் தனது பினாமிகளிடம் கடந்த ஓர் ஆண் டாகக் கூறி வருகிறார். இப்பணத்தை தனது வாரிசுகள் மற்றும் கூட்டாளி களுக்கு பகிர்ந்தளித்து விட்டு இந்தியா திரும்ப அவர் விரும்பு கிறார். சரணடைவதற்காக பிரதமர் மோடி அரசிடம் பேச்சுவார்த்தை நடத்த வழி தேடிக்கொண்டிருப்ப தாக எங்களுக்கு தகவல்கள் கிடைத் துள்ளன” என்று தெரிவித்தனர்.

தற்போது 60 வயதை கடந்து விட்ட தாவூத், பல்வேறு நோய் களால் அவதிப்படுவதாகக் கூறப்படு கிறது. இத்துடன் பாகிஸ்தான் அரசுட னான அவரது உறவிலும் விரிசல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. பாகிஸ்தான் அரசால் தான் கொல் லப்படலாம் என தாவூத் அஞ்சு கிறார். மும்பை மீது அதிக ஈடுபாடு கொண்ட தாவூத், தனது இறப்பு இந்தியாவில் ஏற்பட வேண்டும் என விரும்புகிறார்.

தாவூத் இந்திய அரசிடம் சரண் அடைய விரும்புவதாக தகவல் வெளியாவது இது முதல்முறை அல்ல. தாவூத் சரண் அடைவது தொடர்பாக சுமார் 20 ஆண்டு களுக்கு முன் அவரது சகோதரர் இப்ராஹிம் காஸ்கர், லண்டனில் பிரபல வழக்கறிஞர் ராம்ஜெத் மலானியுடன் பேச்சு நடத்தியதாக வும், ஆனால் இதை அப்போதைய மகாராஷ்டிர முதல்வர் சரத்பவார் ஏற்கவில்லை என்றும் கூறப்பட்டது. இதில் தாவூத், தன்னை வீட்டுச் சிறை யில் அடைக்கும்படி நிபந்தனை விதித்திருந்தார். இவரது பழைய கூட்டாளியும், தற்போது மும்பை சிறையில் அடைக்கப்பட்டுள்ள வருமான மற்றொரு நிழல் உலக தாதா சோட்டா ராஜனால் தாவூத் உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறப்படுகிறது.

ராஜ்கபூர் தயாரிப்பில் வெளி யான ‘ராம் தேரி கங்கா மைலி' என்ற இந்திப் படத்தில் அறிமுகமான நடிகை மந்தாகினியை மணம் முடித்த தாவூத் இப்ராஹிமிற்கு 5 குழந்தைகள். இவர்களின் இரண் டாவது மகளான மஹரூக், பாகிஸ் தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜாவீத் மியாண்டட் மகனை மணம் முடித்துள்ளார். இருவரும் லண்ட னின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழ கத்தில் படித்தபோது காதல் ஏற் பட்டது. ஜாவிதின் மனைவியான தாஹிரா சேஹலும் மந்தாகினியும் ஒன்று விட்ட சகோதரிகள் ஆவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x