

வெறுப்பு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசம், சாகரன்பூரில் ஏற்பட்ட வகுப்பு கலவரம் தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:
நமது நாட்டில் பிரிவினைவாதம், வன்முறைக்கு இடம் அளிக்கக்கூடாது. சாகரன்பூரைச் சேர்ந்த அனைத்து தரப்பு மக்களும் அமைதி காக்க வேண்டும். இந்தச் சம்பவம் மிகுந்த மனவேதனை அளிக்கிறது. வெறுப்பு அரசியலுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.