நபார்டு வங்கி மூலம் விவசாயிகளுக்கு ரூ.21,000 கோடி ஒதுக்கீடு: மத்திய அரசு அனுமதி

நபார்டு வங்கி மூலம் விவசாயிகளுக்கு  ரூ.21,000 கோடி ஒதுக்கீடு: மத்திய அரசு அனுமதி
Updated on
1 min read

நபார்டு வங்கி மூலம் விவசாயி களுக்கு ரூ.21,000 கோடி பட்டுவாடா செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய பொரு ளாதார விவகாரத் துறை செயலர் சக்திகாந்த தாஸ் நேற்று செய்தி யாளர்களிடம் கூறியதாவது:

பணத் தட்டுப்பாடு காரணமாக குளிர்காலத்தில் மேற்கொள்ளப் படும் விவசாயப் பணிகள் தடைபடாமலிருக்க நபார்டு வங்கி மூலம் விவசாயிகளுக்கு பணப் பட்டுவாடா செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறும் நட வடிக்கையால் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, வங்கி யில் பணம் எடுப்பதற்கு உள்ள கட்டுப்பாடுகள் காரணமாக விதை உள்ளிட்ட விவ சாயப் பொருட்களை வாங்க முடியாமல் விவசாயிகள் பெரு மளவு பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக, குளிர் பருவகால விவசாயப் பணிகளை மேற் கொள்ள முடியாமல் உள்ளனர்.

இந்தப் பிரச்சினைக்குத் தீர்வாக, நபார்டு வங்கி மூலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி களுக்கு ரூ.21,000 கோடி வழங்க சிறப்பு அனுமதி அளிக்கப் பட்டுள்ளது. இந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு அமைப்புகள், விவசாயி களின் கடன் தேவைகளை அறிந்து கடன்களை வழங்கும். இதன்மூலம் விவசாயிகள் நடப்பு பருவ விவசாய நடவடிக்கைகளை தொய்வில்லாமல் மேற்கொள்ள முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in