

விபத்துக்குள்ளான பாட்னா எக்ஸ்பிரஸ் ரயிலில், திருமணம் நிச்சயிக்கப்பட்ட மணப்பெண் ஒருவர் தனது தந்தையைத் தேடி கதறி அழுத காட்சி அனைவரையும் கலங்க வைத்தது.
இந்தூர்-பாட்னா எக்ஸ்பிரஸ் ரயில் கான்பூர் அருகே தடம் புரண்டு 120 பேர் பலியாகினர். இந்த ரயிலில் பயணித்தவர்களில் ரூபி என்ற இளம்பெண்ணும் ஒருவர். இவருக்கு டிசம்பர் 1-ம் தேதி திருமணம் நிச்சயிக்கப் பட்டிருந்தது.
திருமணத்துக்காக, இந்தூரில் இருந்து அசாம்காருக்கு தனது தந்தை ராம் பர்மேஷ் சிங், தங்கைகள் அர்ச்சனா, குஷி மற்றும் தம்பியர் விஷார், அபிஷேக் ஆகியோருடன் ரயிலில் பயணித்தார்.
ரயில் விபத்துக்கு உள்ளானதில் ரூபியும் அவரின் தங்கை மற்றும் தம்பிகள் காயங்களுடன் உயிர் தப்பினர். ஆனால், உடன் வந்த தந்தையைக் காணாமல் சிறுவர்கள் கதறி அழுதனர்.
மணப்பெண் ரூபி கூறும் போது, ‘என் தந்தை என்னவா னார் என்றே தெரியவில்லை. மருத்துவமனைகளில் சென்று பார்க்குமாறு சிலர் கூறுகின்ற னர். பிணவறைகளில் சென்று பார்க்குமாறு வேறு சிலர் கூறு கின்றனர். என்ன செய்வதென்றே தெரியவில்லை.
என் திருமணம் நடக்குமா, இல்லையா என்பதைப் பற்றி எனக்கு கவலையில்லை. எனக்கு என் தந்தையைப் பார்த்தாக வேண்டும்’ என்றார்.
ரூபி தன்னுடன் எடுத்து வந்த திருமண பட்டு ஜவுளி மற்றும் நகைகளும் காணவில்லை. இது குறித்து அவர்கள் புகார் எதுவும் பதிவு செய்யவில்லை.