

ரயில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்படுவது குறித்து ஓய்வு பெற்ற ரயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ரயில்கள் தடம்புரண்டு விபத்து ஏற்படு வதற்கு தண்டவாளங்களில் ஏற்படும் விரிசல் முக்கிய காரணமாக இருக்கிறது. தண்டவாளங்கள் தரமாக இல்லாதது, நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிக எடையுள்ள பெட்டிகளைப் பயன்படுத்துவது, இணைப்புகளில் வெல்டிங் விட்டுப் போதல் ஆகியவை தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட முக்கிய காரணங்களாக அமைகின்றன.
இதுதவிர, வெயில் காலத்தில் ஏற்படும் வெப்பத்தால் தண்டவாளம் விரிவடைவதும் குளிர்காலத்தில் குறுகுவதும் தண்ட வாளத்தில் விரிசல் ஏற்படுவதற்கு வாய்ப்பாக அமைகிறது.
எனவே, தினமும் மேற்கொள்ள வேண்டிய தண்டவாள பராமரிப்புப் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். மேலும் ரயில் தண்டவாளங்களில் அதிகபட்சம் 50 டன் எடை கொண்ட சரக்கு பெட்டிகளை மட்டுமே இயக்க வேண்டும். இதைவிட கூடுதல் எடையுடன் இயக்கினால் தண்டவாளங்களில் விரைவில் விரிசல் ஏற்படும். இதை அந்தந்த ரயில்வே மண்டல பாதுகாப்பு அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.