“குஜராத் பாலம் சம்பவம்... விபத்தா (அ) சதியா?” - உத்தவ் தாக்கரே

உத்தவ் தாக்கரே | கோப்புப் படம்
உத்தவ் தாக்கரே | கோப்புப் படம்
Updated on
1 min read

மும்பை: குஜராத் மாநிலம் மோர்பி நகரில் கேபிள் பாலம் அறுந்து விழுந்த சம்பவம் விபத்தா அல்லது சதியா என்று கேள்வி எழுப்பியுள்ளார் உத்தவ் தாக்கரே.

கடந்த 2016-ஆம் ஆண்டு இதேபோன்ற சம்பவம் மேற்கு வங்கத்தில் நடந்தது. அப்போது பிரதமர் நரேந்திர மோடி அதுகுறித்து இது கடவுளின் செயல் என்று விமர்சித்திருந்தார். இதனை சுட்டிக்காட்டி சிவசேனாவின் அதிகாரபூர்வ இதழான ‘சாம்னா’வில் எழுதப்பட்டுள்ள தலையங்கத்தில் பாஜக கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது.

அதில், “கடந்த 2016-ஆம் ஆண்டு இதேபோன்ற சம்பவம் மேற்கு வங்கத்தில் நடந்தது. அப்போது பிரதமர் நரேந்திர மோடி அது குறித்து ’இது கடவுளின் செயல்’ என்று விமர்சித்திருந்தார். இப்போது இந்தச் சம்பவத்தை என்னவென்று சொல்வார். இது விபத்தா? சதியா? அதிகாரிகளின் ஏமாற்று வேலையால் நிகழ்ந்த வினையா? போன உயிர்களைக் கொண்டு வர முடியுமா? இந்த பாலத்தை மறுசீரமைப்பு செய்த நிறுவனத்தை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்.

குஜராத் அரசு பொறுப்புகளைத் தட்டிக் கழித்துவிட முடியாது. இந்தப் பாலம் மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவிடப்பட்ட நான்காவது நாளிலேயே விபத்து நடந்துள்ளது. அப்படியென்றால் பால மறுசீரமைப்புப் பணிகள் உண்மையிலே முடிந்திருந்தனவா இல்லையா? அந்தப் பாலத்தில் எப்படி அத்தனை பெரிய கூட்டம் அனுமதிக்கப்பட்டது. குஜராத் அரசு பதிலளிக்க நிறைய கேள்விகள் இருக்கின்றன. மத்திய அரசுக்கும் இதில் பொறுப்பிருக்கிறது" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

பாலம் சீரமைப்புப் பணிகள் ஓரீவா குரூப் என்ற நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அந்த நிறுவனத்தைச் சேர்ந்த 4 பேர் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முன்னதாக, குஜராத் மாநிலம் மோர்பி நகரில் தொங்கு பாலம் உடைந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 141-ஆக உயர்ந்துள்ளது. முழு விவரம்: குஜராத் மோர்பி தொங்கு பாலம் விபத்து | ஒரே நேரத்தில் 100 பேர் மட்டுமே நிற்க வேண்டிய இடத்தில் 500 பேர் வரை அனுமதி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in