

காஷ்மீர் பள்ளத்தாக்கின் பல்வேறு இடங்களில் நேற்று போராட்டக் காரர்கள் மற்றும் பாதுகாப்பு படை யினர் இடையிலான மோதலில் சுமார் 100 பேர் காயம் அடைந்தனர்.
நகரை ஒட்டிய சவுரா பகுதி யில் சட்டம் ஒழுங்கை சீர்குலைத் தாக இளைஞர்கள் சிலரை போலீ ஸார் கைது செய்ய முயன்றனர். இதையடுத்து கல்வீச்சில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் பாதுகாப்பு படையினர் இடையே நாள் முழுவதும் மோதல் ஏற்பட்டது. இதில் காவல் கண்காணிப்பாளர் ஹஸ்ரத்பால் மற்றும் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 35 உட்பட சுமார் 80 பேர் காயம் அடைந்தனர். பொதுமக்கள் தரப்பில் இருவர் பெல்லட் குண்டு பாய்ந்து காயம் அடைந்தனர்.
இதுபோல் பாரமுல்லா மாவட் டம், சோப்போர் அருகே ஏற்பட்ட மற்றொரு மோதலில் டிஎஸ்பி உட்பட 15 பேரும் சோபியான் மாவட்டத்தின் சில இடங்களில் 5 பேரும் காயம் அடைந்தனர்.
இதனிடையே பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் 2 நாள் பயணமாக நேற்று காஷ்மீர் சென் றார். உரி எல்லைப் பகுதியில் அவர் நேற்று ராணுவ வீரர்களை சந்தித்தார்.