பிரதமர்கள் அருங்காட்சியகத்தில் மோடி அரங்கு விரைவில் திறப்பு

பிரதமர்கள் அருங்காட்சியகத்தில் மோடி அரங்கு விரைவில் திறப்பு
Updated on
1 min read

புதுடெல்லி: இந்தியாவின் பிரதமர்களுக்காக தனி அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என கடந்த 2016-ம் ஆண்டு திட்டமிடப்பட்டது. இதற்காக ரூ.270 கோடி மதிப்பிலான திட்டத்துக்கு கடந்த 2018-ம் ஆண்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்படி டெல்லியில் உள்ள தீன் மூர்த்தி முர்க் பகுதியில் பிரதமர்களுக்கான அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு அதை பிரதமர் மோடி கடந்த ஏப்ரல் மாதம் திறந்து வைத்தார்.

இதில் நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு முதல் மன்மோகன் சிங் வரை 14 பிரதமர்களுக்கான அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அரங்கங்களில் முன்னாள் பிரதமர்களின் போட்டோக்கள், உரைகள், வீடியோக்கள், பேட்டி கள், ஒரிஜனல் எழுத்துக்கள் போன்றவை இடம் பெற்றுள்ளன. இங்கு பிரதமர் மோடிக்கும் அரங்கம் அமைப்பதற்கான பணியில் ஈடுபட்டுள்ளதாக மத்திய கலாச்சாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த அரங்கம் பொது மக்களின் பார்வைக்கு அடுத்தாண்டு ஜனவரி மாதம் திறக்கப்படவுள்ளது.

இந்திய பிரதமர்களின் வாழ்க்கை, சாதனைகள் பற்றி பிரபல கல்வியாளர்கள் மற்றும் தலைவர்கள் உரையாற்றும் நிகழ்ச்சியையும் இந்த அருங்காட்சியகம் தொடங்கவுள்ளதாக மத்திய கலாச்சாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in