சுஷ்மாவுக்கு சிறுநீரக மாற்று சிகிச்சைக்கான பரிசோதனை

சுஷ்மாவுக்கு சிறுநீரக மாற்று சிகிச்சைக்கான பரிசோதனை
Updated on
1 min read

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகான பரிசோதனைக்காக வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சுஷ்மா கடந்த 7-ம் தேதியன்று எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதற்குமுன்னதாகவும் அவ்வப்போது எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்று வந்தார்.

இந்நிலையில் தனது உடல்நிலை தொடர்பாக சுஷ்மா ஸ்வராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், "சிறுநீரகம் செயலிழந்துவிட்டதால் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதியாகியுள்ளேன். தற்போது டயாலஸிஸ் செய்யப்படுகிறது.

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கான மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. கடவுள் கிருஷ்ணன் என்னை காப்பாற்றுவார்" என ட்வீட் செய்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து அவரது உடல் நிலை விரைவில் சீரடைய வாழ்த்து தெரிவித்து பொதுமக்கள், பிரபலங்கள் பலர் ட்வீட்களை பதிவு செய்து வருகின்றனர்.

கடந்த ஏப்ரல் மாதம் நிமோனியா நோய் தாக்கத்துக்காக சுஷ்மா டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in