

டெல்லி தொழிலாளியிடம் பர்ஸை வழிப்பறி செய்த திருடர் கள் அதில் 500, 1000 ரூபாய் நோட்டுகள் மட்டும் இருந்ததால் திரும்பி வந்து பர்ஸை வீசி யெறிந்தனர். அதோடு அந்த தொழிலாளியின் கன்னத்தில் ஓங்கி அறைந்துவிட்டு தப்பி யோடிவிட்டனர்.
டெல்லி புறநகர்ப் பகுதியான நொய்டாவைச் சேர்ந்த தொழி லாளி விகாஷ் குமார். இவர் தன்னிடம் உள்ள 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற கடந்த இரு நாட்கள் வங்கி வாசலில் காத்து நின்று ஏமாற்றமடைந்தார்.
இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு 11 மணி அளவில் பணி முடிந்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப் போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 திருடர்கள், அவரை வழிமறித்து பர்ஸை பறித்துச் சென்றனர்.
அதிர்ச்சியடைந்த விகாஷ் குமார், திருடர்கள் சென்ற பாதை யில் பின்தொடர்ந்து ஓடினார். எதிர்பாராதவகையில் 2 திருடர் களும் மீண்டும் அவரிடம் திரும்பி வந்தனர்.
‘பர்ஸில் 500, 1000 ரூபாய் நோட்டுகளை மட்டுமே வைத் திருக்கிறாய். இந்த நோட்டுகளை இன்னமும் மாற்றவில்லையா. ஒரு 100 ரூபாய் நோட்டுகூடவா உன்னிடம் இல்லை’ என்று கூறி பர்ஸை திருப்பி அளித்தனர்.
அதோடு கோபத்தில் விகாஷ் குமாரின் கன்னத்தில் ஓங்கி அறைந்துவிட்டு மோட்டார்சைக் கிளில் தப்பிச் சென்றுவிட்டனர். வலி ஒருபுறம் இருந்தாலும் பணம் திரும்ப கிடைத்த சந்தோஷத்தில் அவர் வீடு திரும்பினார்.
இதுகுறித்து நொய்டா போலீ ஸார் கூறியபோது, சம்பந்தப்பட்ட நபர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கவில்லை, அவர் புகார் அளித்தால் விசாரணை நடத்து வோம் என்று தெரிவித்தனர்.