

உத்தரப் பிரதேச மாநிலம் மொரா தாபாத்தைச் சேர்ந்தவர் பவன் அகர்வால். இவர், ‘‘நாட்டுக்கு எதிராக செயல்பட்ட குற்றத்தின் கீழ் யார் யார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தியாகிகள் என்று யார் யார் அறிவிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரங்களை பிரதமர் அலுவலகம் வெளியிட வேண்டும்’’ என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்விகள் கேட்டு விண்ணப்பித்திருந்தார்.
தகவல்கள் இல்லை
அந்த விண்ணப்பத்தை மத்திய உள்துறைக்கு பிரதமர் அலுவல கம் அனுப்பியது. அதை பார்த்த உள்துறை, ‘‘அதுபோல் எந்த பட் டியலும் இல்லை. தேசப்பற்றுள்ளவர், தேசதுரோகி, தியாகி என்று குறிப்பிட்ட அளவுகோலை வைத்து வரைப்படுத்தி அதுபோல் எந்த தகவல்களும் உள்துறையிடம் இல்லை. எனவே, பெயர்ப்பட்டியலை தருவதற்கு இயலாது’’ என்று பதில் அளித்தது.
இதுகுறித்து மத்திய தகவல் ஆணையர் சுதீர் பார்கவா முன்னிலையில் நேரில் ஆஜராகி மனுதாரர் பவன் அகர்வால் வாதிட் டார். ‘‘தேச துரோக வழக்கு பலர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே யார் யார் நாட்டுக்கு எதிராக செயல்பட்டவர்கள் என்ற விவரங்கள் மத்திய உள்துறை யிடம் இருக்க வேண்டும். அதேபோல்தான் சுதந்திர போராட்ட வீரர்கள், தியாகிகளின் விவரங்களையும் உள்துறை வைத்திருக்க வேண்டும்’’ என்று கூறினார்.
மனுதாரர் மற்றும் மத்திய உள்துறை ஆகிய இரு தரப்பினரின் வாதங்களை கேட்ட பிறகு, மத்திய தகவல் ஆணையர் பார்கவா கூறுகையில், ‘‘தேசிய குற்றங்கள் பதிவு ஆராய்ச்சி அமைப்பின் ஆவணங்கள்படி கடந்த 2014-ம் ஆண்டு 47 தேச துரோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தேச துரோக வழக்கை சந்திக்கும் நபர்களின் விவரங்கள் உள்துறையிடம் இல்லை என்றால், இதுதொடர்பான தகவல்களை வைத்திருக்கும் அரசு துறைக்கு ஆர்டிஐ விண்ணப்பம் அனுப்பி வைக்கப்படும்’’ என்றார்.
பார்கவா மேலும் கூறும்போது, ‘‘சுதந்திர போராட்ட வீரர்களைப் பற்றிய விவரங்கள் மத்திய உள்துறை வைத்திருக்க வேண்டும். எனவே, இதுகுறித்து தங்களிடம் உள்ள தகவல்களை உள்துறையும், மத்திய பொது தகவல் அதிகாரியும் வழங்க வேண்டும். அப்படி இல்லையென்றால் சம்பந்தபட்ட துறைக்கு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்’’ என்று அறிவுறுத்தினார்.