

போபால்: மத்தியபிரதேசத்தில் குளோரின் வாயுக்கசிவு ஏற்பட்டதில் 3 பேருக்குஉடல் நலக் குறைவு ஏற்பட்டது.
ம.பி.யில் போபால் நகரின் ஈத்காஹில்ஸ், ஷாஜனாபாத் பகுதியில்மாநகராட்சி சார்பில் தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையத்தில் 900 கிலோ குளோரின் வாயு சிலிண்டரில் நேற்று முன்தினம் கசிவு ஏற்பட்டது. இதில் அருகில் வசிக்கும்7 பேருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மூச்சு விடுவதில் சிரமம், இருமல்மற்றும் வாந்தி ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். வாயுக்கசிவு தெரியவந்தவுடன் தண்ணீரில் சிலிண்டர் எறியப்பட்டு, பழுது நீக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். போபால் நகரில் தற்போது மூடப்பட்டுள்ள யூனியன் கார்பைடு தொழிற்சாலையில் கடந்த 1984-ல் விஷவாயுக்கசிவு ஏற்பட்டதில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் வாயுக்கசிவு சம்பவத்தால் அருகில் வசிக்கும் மக்கள் பதற்றம் அடைந்தனர்.