

சமாஜ்வாதி கட்சிக்குள் குடும்ப அரசியல் மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் மக்கள் ஆதரவை பெற்றவர் யார் என்பதை நிரூபிக்கும் போட்டி முதல்வர் அகிலேஷ் யாதவ் மற்றும் அவ ரது சித்தப்பா ஷிவ்பால் யாதவ் இடையே தொடங்கியுள்ளது.
உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ், மாநில சமாஜ்வாதி கட்சித் தலைவர் ஷிவ்பால் யாதவ் இடையே அதிகார சண்டை அதிகரித்து வருகிறது. இதனால் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன் பாகவே சமாஜ்வாதி கட்சி இரண்டாக உடையும் ஆபத்து ஏற் பட்டுள்ளது. இந்தச் சூழலில் பொதுமக்களிடம் அதிக ஆதரவு பெற்றவர் யார் என்ற பலத்தை நிரூபிக்கும் போட்டி அகிலேஷ், ஷிவ்பால் இடையே தொடங்கியுள்ளது. கட்சியின் வெள்ளி விழாவை சிறப்பாக கொண்டாடி தனது பலத்தை நிரூபிக்க தயாராகி வருகிறார் ஷிவ்பால். அதேபோல அகிலேஷ் யாதவ் நாளை தனது ரத யாத்திரையை தொடங்கவுள்ளார். இதில் யார் வெற்றி பெறுவார் என்பது விரைவில் தெரியவரும் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.