Published : 26 Oct 2022 01:10 PM
Last Updated : 26 Oct 2022 01:10 PM

பாரத் மாதா கி ஜெய் சொல்லும் போது... - சிறுபான்மையின பிரதமர் விவாதம் குறித்து விவேக் அக்னிஹோத்திரி கருத்து

இயக்குநர் விவேக் அக்னிஹோத்திரி | கோப்புப்படம்

புதுடெல்லி: "இந்தியாவில் வசிக்கும் முஸ்லிம்கள் “பாரத் மாதா கீ ஜெய்”, “வந்தே மாதரம்”எனச் சொல்லும் போது இந்தியா ஒரு முஸ்லிமை பிரதமராக ஏற்றுக்கொள்ளும்" என்று திரைப்பட இயக்குநர் விவேக் அக்னிஹோத்திரி தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் நிலவி வந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலைகள் முடிவுக்கு வந்த நிலையில் திங்கள்கிழமை கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ரிஷி சுனக், செவ்வாய்கிழமை இங்கிலாந்தின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் இங்கிலாந்தின் பிரதமராகி இருப்பது கொண்டாடப்பட்டு வரும் வேளையில், அது இந்தியாவில் பெரும் விவாதத்தை கிளப்பியும் உள்ளது.

இங்கிலாந்து இந்து சிறுபான்மையைச் சேர்ந்த ரிஷி சுனக்கை தங்களின் பிரதமராக ஏற்றுக்கொண்டதை போல இந்தியாவில் சிறுபான்மையினர் ஒருவர் பிரதமராக வர முடியுமா என்று விவாதம் தற்போது சூடுபிடித்துள்ளது. இந்த விவாதத்தில் தற்போது 'தி காஷ்மீர் பைல்ஸ்' படத்தின் இயக்குநர் விவேக் அக்னிஹோத்தரியும் இணைந்துள்ளார்.

இதுகுறித்து பத்திரிக்கையாளர் அர்ஃபா கானும் ஷெர்வானி தனது ட்விட்டர் பதிவில், " இந்தியா எப்போது ஒரு முஸ்லிமை பிரதமராக ஏற்றுக்கொள்ள (தேர்ந்தெடுக்க) தயாராகும் என்று கேட்டிருந்தார்.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக இயக்குநர் விவேக் அக்னிஹோத்தரி செய்துள்ள ட்விட்டர் பதிவில், " இந்தியாவில் வசிக்கும் முஸ்லிம்கள், கஃபிர் என்ற வார்த்தையை தடைசெய்யும் போது, நிபந்தனைகளின்றி 'இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு' எதிராக பேசும் போது, காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி என்று ஏற்றுக்கொண்டு, தங்களை பாரத நாட்டைச் சேர்ந்தவர்களாக அடையாளப்படுத்திக் கொண்டு, அதே உணர்வுடன், அர்ப்பணிப்புடன் “பாரத்மாதா கி ஜெய்”, “வந்தே மாதரம்” என சொல்லும் போது சிறுபான்மையினர் இந்தியாவின் பிரதமராவது நடக்கும். நீங்கள் தயாரா?" என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, ரிஷி சுனக் பிரதமாரனது குறித்த விவாதம் ஆளும் பாஜக, எதிர்க்கட்களிடம் பெரும் வார்த்தை போரை உருவாக்கி இருக்கிறது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சசி தரூர், ப.சிதம்பரம் உள்ளிட்ட தலைவர்கள், இந்தியாவில் சிறுபான்மையினத்தைச் சேர்ந்த ஒருவர் பிரதமராக வர முடியுமா என்று கேள்வி எழுப்பி இருக்கின்றனர். இதற்கு பதில் அளித்துள்ள பாஜக, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்-ஐ சுட்டிக்காட்டி, இந்தியாவில் ஒரு சீக்கியர் பிரதமராகவும், ஒரு சீக்கியர், மூன்று முஸ்லிம்கள் குடியரசுத் தலைவராகவும் இருந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளது.

மேலும், இங்கிலாந்தில் பிறந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக்கும், ராஜீவ் காந்தியை திருமணம் செய்த பின்னரும் பல ஆண்டுகளாக இந்திய குடியுறுமை பெற மறுத்த சோனியா காந்தியும் ஒன்றாக முடியாது என்றும் தெரிவித்துள்ளது.

ரிஷி சுனக் இங்கிலாந்து பிரதமரானது குறித்து கருத்து தெரிவித்திருந்த ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி, "இங்கிலாந்து மக்கள் இனச் சிறுமான்மையினரான ரிஷி சுனக்கை தங்களது பிரதமராக ஏற்றுக்கொண்டுள்ளனர். இந்தியா இன்னும் பிரிவினை பாராட்டுகின்ற என்சிஆர், சிஏஏ சட்டங்களில் கட்டுண்டு கிடக்திறது என்று தெரிவித்திருந்தார். அவரது கருத்துக்கு பதிலளித்திருந்த பாஜகவின் ரவி சங்கர் பிரசாத், அவர்களால் முதலில் முப்தி ஜி யால் ஜம்மு காஷ்மீரில் உள்ள இனச்சிறுபான்மையினரை அம்மாநில முதல்வராக ஏற்றுக்கொள்ள முடியுமா" என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x