

ரூ.37 ஆயிரம் கள்ளநோட்டுகளை வங்கியில் டெபாசிட் செய்ய முயன்ற 65 வயது மூதாட்டியை போலீஸார் கைது செய்தனர்.
கேரளாவின் மலப்புரம் மாவட்டம், கொண்டோட்டியில் உள்ள ஸ்டேட் வங்கி கிளையில் மாரியம்மாள் என்ற 65 வயது மூதாட்டி நேற்று முன்தினம், ரூ.49,500 மதிப்பிலான 1000 ரூபாய் நோட்டுகளை தனது கணக்கில் டெபாசிட் செய்தார்.
அதில், ரூ.37 ஆயிரம் மதிப்பிலான 1000 ரூபாய் தாள்கள் போலியானவை என்பதை வங்கி ஊழியர்கள் கண்டுபிடித்தனர். உடனடியாக போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
வங்கி கிளை மேலாளர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் கைது செய்து விசாரித்ததில், வெளிநாட்டில் உள்ள தனது பிள்ளைகள் இத்தொகையை அனுப்பியதாக அம்மூதாட்டி தெரிவித்தார்.
மூதாட்டி மீது வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.