Published : 26 Oct 2022 05:40 AM
Last Updated : 26 Oct 2022 05:40 AM
பெங்களூரு: கர்நாடகாவில் ராமநகர் மாவட்டம், மாகடி அருகேயுள்ள கெம்பாபுரா கிராமத்தில் 400 ஆண்டுகள் பழமையான கெஞ்சிகல் பண்டே மடம் உள்ளது. இதன் தலைமை மடாதிபதியாக பசவலிங்கேஷ்வரா சுவாமி கடந்த 1997 முதல் பொறுப்பு வகித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மடத்தின் பணியாளர்களுடன் நிதி விவகாரம் குறித்து அவர் ஆலோசனை நடத்தினார். பின்னர் தன் அறைக்கு உறங்க சென்றவர் காலையில் நீண்ட நேரம் ஆகியும் வெளியே வரவில்லை. சந்தேகம் அடைந்த ஊழியர்கள் கதவை உடைத்து பார்த்தபோது, மடாதிபதி தூக்கில் தொங்கினார். தகவலின் பேரில் கூதூர் போலீஸார், சடலத்தை கைப்பற்றி விசாரணைநடத்தினர். பிரேதப் பரிசோதனைக்கு பிறகு நேற்று மடத்தின் வளாகத்திலேயே மடாதிபதியின் உடல் தகனம் செய்யப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT