எம்.பி.க்களின் சம்பளம் இரு மடங்காக உயருகிறது

எம்.பி.க்களின் சம்பளம் இரு மடங்காக உயருகிறது
Updated on
1 min read

எம்.பி.க்களின் சம்பளம் இரு மடங்காகவும், குடியரசுத் தலைவரின் சம்பளம் 3 மடங்காகவும் அதிகரிக்கப்பட உள்ளது.

எம்.பி.க்களின் அடிப்படை சம்பளம், ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சமாக விரைவில் உயர்த்தப்படும் என, எதிர்பார்க்கப் படுகிறது.

இதுதொடர்பாக, எம்.பி.க்களின் சம்பள விவகாரங்களுக்கான நாடாளுமன்றக் குழு அளித்த பரிந்துரையை பிரதமர் அலுவலகம் பரிசீலித்து வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பாஜக எம்.பி. யோகி ஆதித்யநாத் தலைமையிலான, எம்.பி.க்களின் சம்பளம் மற்றும் சலுகைகளுக் கான நாடாளுமன்றக் குழு, எம்.பி.க்களின் அடிப்படை சம்பளத்தை மட்டும் இரட்டிப்பாக்க வில்லை; இதர சலுகைகளையும் கணிசமான அளவுக்கு உயர்த்த பரிந்துரை செய்துள்ளது.

இதனைத்தொடர்ந்து, குடியரசுத் தலைவரின் மாத சம்பளத்தையும் ரூ.1.5 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாகவும், ஆளுநர்களின் சம்பளத்தை, ரூ.1.10 லட்சத்தில் இருந்து ரூ.2.5 லட்சமாக உயர்த்த வும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in