

ஒரு பதவி ஒரே ஓய்வூதியம் என்பது பணம் தொடர்பானதல்ல, ராணுவ வீர்ர்களின் கவுரவம் மற்றும் நீதி தொடர்பானது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
ஒரு பதவி ஒரே ஓய்வூதிய விவகாரத்தில் முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தையடுத்து அவரது குடும்பத்தினரை ராகுல் காந்தி சந்திக்கச் சென்ற போது கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில் முன்னாள் ராணுவ வீரர்களைச் சந்தித்த ராகுல் காந்தி, ஒரே பதவி ஒரே பென்ஷன் திட்டம் பற்றி மத்திய அரசு எந்த ஒரு முயற்சியும் எடுக்கவில்லை, மாறாக ஓய்வூதிய உயர்வு பற்றியே மத்திய அரசு கூறியுள்ளது என்றார் ராகுல் காந்தி.
மேலும் அவர் கூறும்போது, “உயிரிழந்த ராணுவ வீரரின் குடும்பத்தினரிடம் மத்திய அரசு மன்னிப்பு கேட்க வேண்டும். என்னைக் கைது செய்தது பற்றி கவலையில்லை ஆனால் உயிர்த்தியாகம் செய்தவரின் குடும்பத்தினரை தாக்கி, வசைபொழிந்தது தவறு. இது பணம் பற்றிய விவகாரமல்ல, கவுரவம், நீதி பற்றியது.
முன்பு ஜெய் ஜவான் என்பது கோஷமாக இருந்தது, தற்போது சிலபல தொழிலதிபர்களுக்கு பெரிய பயன்களை கையளித்து வரும் மத்திய அரசு ராணுவ வீரர்களுக்கு அவர்களுக்குச் சேர வேண்டியதைக் கூட அளிக்க மறுக்கிறது” என்று சாடினார்.