Published : 23 Oct 2022 05:29 AM
Last Updated : 23 Oct 2022 05:29 AM
ஜம்மு: ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தி ஸ்ரீநகரில் உயர் பாதுகாப்பு மிகுந்த குப்கர் சாலைப் பகுதியில் உள்ள அரசு பங்களாவில் வசித்து வருகிறார். இந்நிலையில் அந்த பங்களாவை காலி செய்யுமாறு முஃப்திக்கு காஷ்மீர் நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதுகுறித்து மெஹபூபா கூறியதாவது:
இது எதிர்பார்த்த நடவடிக்கை தான். நான் தங்கியிருக்கும் அரசு பங்களா, ஜம்மு-காஷ்மீர் முதல்வருக்கானது என்று நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த பங்களா கடந்த 2005, டிசம்பரில் முதல்வர் பதவியிலிருந்து விலகிய பிறகு எனது தந்தைக்கு (முஃப்தி முகமது சயீது) ஒதுக்கப்பட்டதாகும்.
எனவே, நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ள காரணம் சரியானது அல்ல. இந்த நோட்டீஸ் விவகாரம் தொடர்பாக எனது சட்டக் குழுவுடன் ஆலோசித்து, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.
2020-ல் காங்கிரஸ் முன்னாள் தலைவர் குலாம் நபி ஆசாத், காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா ஆகியோர் அரசு பங்களாக்களை காலி செய்துவிட்டனர். தற்போது மெஹபூபா முப்தியை காலி செய்யுமாறு காஷ்மீர் நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT