ரூ.500, 1000 நோட்டுகள் மூலம் மின் கட்டணம் செலுத்தலாம்: மத்திய அரசு

ரூ.500, 1000 நோட்டுகள் மூலம் மின் கட்டணம் செலுத்தலாம்: மத்திய அரசு
Updated on
1 min read

மின்கட்டணம் மற்றும் தண்ணீர் கட்டணங்களைச் செலுத்தும்போது நவம்பர் 11-ம் தேதி வரை ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செலுத்தலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

கட்டணங்கள், மத்திய, மாநில அரசுகளுக்கு செலுத்த வேண்டிய தொகை, வரிகள், அபராதம் ஆகியவற்றிற்கு பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளைப் பயன்படுத்தலாம் என்று பொருளாதார விவகாரச் செயலர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

“நவம்பர் 11 நள்ளிரவு வரை இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இது குறித்த ரெக்கார்டுகள் பராமரிக்கப்பட வேண்டும்” என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

சமையல் எரிவாய் சிலிண்டர் விநியோகஸ்தர்கள், ரயில்வே உணவகங்கள், மருந்து விற்பனையாளர்கள், டிக்கெட் கவுண்டர்களில் ரூ.500, ரூ.1000 பயன்படுத்தலாம் என்று மத்திய அரசு புதனன்று அறிவித்ததையடுத்து தற்போது மின் கட்டணங்கள் உள்ளிட்ட அரசுக்கு சேர வேண்டிய தொகையினை பழைய நோட்டுகள் மூலம் செலுத்தலாம் என்று அறிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in