பாதுகாப்புக்காகவே இந்தியா ஆயுதங்களை வழங்குகிறது: சர்வதேச நிபுணர்கள்

பாதுகாப்புக்காகவே இந்தியா ஆயுதங்களை வழங்குகிறது: சர்வதேச நிபுணர்கள்
Updated on
1 min read

இந்தியா ஒரு புறம் பிரம்மோஸ் போன்ற ஏவுகணைகள், ஆயுதங்களை தயாரிப்பது மட்டுமன்றி விற்பனையிலும் இறங்கியிருப்பதால், போருக்கு வழிவகுக்குகிறது என்று மற்ற நாடுகள் நினைக்க முடியாது. ஏனெனில், ஆயுதங்களை வாங்கும் வெளிநாடுகள், அந்தந்த நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை பாதுகாத்துக் கொள்ளவே இந்தியா வழங்குகிறது என்று சர்வதேச நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

அதற்கு உதாரணமாக ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ், இந்திய பயணத்தின் போது பேசுகையில், ‘‘ஐ.நா. சார்பில் சர்வதேச அளவில் அமைதியை ஏற்படுத்தும் ராணுவப் படைக்கு (பல நாடுகள் சேர்ந்த அமைதிப் படை) ஆயிரக்கணக்கான வீரர்களை இந்தியா அனுப்பி வருகிறது. அவர்களில் ஏராளமானோர் பல நாடுகளில் உயிர்த் தியாகம் செய்துள்ளனர். உலக அமைதிக்கு இந்தியா மேற்கொள்ளும் நடவடிக்கை அளப்பரியது’’ என்று மனம் திறந்து பாராட்டியிருப்பதை நிபுணர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

ஆண்டுதோறும் பட்ஜெட்டில் ராணுவத்துக்கு கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கப்படுகிறது. இதில் எந்த நாடும் விதிவிலக்கல்ல. அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளுக்கு பரவாயில்லை; இந்தியா போன்ற வளரும் நாடுகள் ராணுவத்துக்கு ஏராளமாக நிதி ஒதுக்குவது வளர்ச்சியை பாதிக்கும் என்று விமர்சனங்கள் முன் வைக்கப்படுகின்றன. இந்தச் சூழ்நிலையில், ராணுவத்துக்கு நிதி ஒதுக்கி அதிநவீன ஆயுதங்கள் தயாரிப்பது மட்டுமன்றி, மற்ற சிறிய நாடுகளின் பாதுகாப்புக்கும் அவற்றை வழங்குவதன் மூலம் வருவாய் ஈட்ட முடியும் என்பதை இந்தியா நிரூபித்து வருவது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in