

மும்பை அருகே சொகுசு காரில் இருந்து ரூ.ஒரு கோடி மதிப்பிலான 1000 ரூபாய் நோட்டுகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். காரில் பயணித்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து நவி மும்பை போலீஸார் வெளியிட்ட தகவல் வருமாறு: நவி மும்பையின் வாஷி பகுதியில் போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, வாஷியின் 28-வது செக்டாரில் குடியிருப்பு வளாகம் ஒன்றில் சந்தேகத்துக்கு இடமான வகையில் வந்து நின்ற காரை சோதித்ததில், இரு பைகளில் ரூ.1 கோடி இருந்தது தெரியவந்தது. காரில் வந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.இவ்வளவு பெரிய தொகை எந்த வழியில் வந்தது என்பது குறித்து அவர்கள் தெளிவான விளக்கம் அளிக்கவில்லை. முறையான ஆவணங்கள் ஏதும் அவர்கள் வைத்திருக்கவில்லை என்பதால், வருமான வரித் துறைக்கும் தகவல் தரப்பட்டது.