

சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ இதழான ‘சாம்னா’வில் இதுகுறித்து எழுதப்பட்டுள்ளதாவது:
லடாக் முதல் அருணாச்சல், சிக்கிம் வரை சீனாவின் அத்துமீறிய நடவடிக்கைகளை கடந்த பல ஆண்டுகளாகவே கட்டுப்படுத்த தவறிவருகிறோம். சீன படையினர் 60 பேர் இந்திய எல்லைக்குள் நுழைந்து நீர்ப்பாசன திட்டப் பணிகளை தடுத்து நிறுத்தும் அளவுக்கு நிலைமை வந்து விட்டது.
நமது ராணுவ அமைச்சர், இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறார்? சீனாவை அடக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? பாகிஸ்தானை எச்சரித்தால் மட்டும் போதாது சீனாவின் அத்துமீறல்களையும் தீவிரமாகக் கருதி நடவடிக்கை எடுக்க வேண்டிய காலம் வந்துவிட்டது.
அண்மையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நுழைந்து இந்திய ராணுவ வீரர்கள் அதிரடி தாக்குதல் நடத்தி, தீவிரவாத முகாம்களை அழித்தனர். அதேபோன்ற அதிரடித் தாக்குதலை சீனா மீதும் தொடுப்பதுதான் தக்க பதிலடியாக இருக்கும்.
இவ்வாறு ‘சாம்னா’ இதழில் கூறப்பட்டுள்ளது.