

உத்தரப் பிரதேசத்தில் காசி, மிர்சாபூர் ஆகிய கோயில் நகரங் களில் மத்திய அரசின் டெலிமெடி சின் வசதி செய்யப்பட உள்ளது. இதற்காக செயற்கைக்கோள் தொடர்பு வசதி ஏற்படுத்தி தருமாறு இஸ்ரோவிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மத்திய சுகாதார அமைச் சகத்தால் ‘செஹத் (உடல் நலம்)’ என்ற பெயரில் டெலிமெடிசின் வசதி, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டது. அப்போலோ மருத்துவமனை மருத்துவர்களிடம் ஆலோசனை பெறும் வகையில் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகத் தின் உதவியுடன் இத்திட்டம் தொடங்கப்பட்டது. நாடு முழுவதி லும் உள்ள பொது சேவை மையங் கள் மூலமாக குறைந்த கட்டணத் தில் இந்த சேவை வழங்கப்பட்டு வருகிறது.
கேரளாவில் சபரிமலை, உத்தரா கண்டில் அமர்நாத், கேதார்நாத், குஜராத்தில் துவாரகா, ஒடிஷாவில் ஜெகந்நாத்புரி, தமிழகத்தில் ராமேசுவரம் என இந்துக்களின் புனிதத் தலங்களிலும் இந்த வசதி தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது, உ.பி.யின் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயில் மற்றும் அதன் அருகிலுள்ள மிர்சாபூர் விந்தியாச்சல் கோயில் பக்தர்களின் வசதி கருதி, இக்கோயில் நகரங்களும் இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
பல்கலைக்கழகம் உதவி
இது குறித்து ‘தி இந்து’விடம் மத்திய சுகாதார அமைச்சக வட்டா ரங்கள் கூறும்போது, “பிரதமர் நரேந்திர மோடியின் தொகுதியான வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தின் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை உதவியுடன் இவ்விரு நகரங்களிலும் டெலி மெடிசின் வசதி தொடங்கப்படும்.
இதன் மூலம் இவ்விரு கோயில் நகரங்களுக்கும் நாடு முழுவதிலும் இருந்து வரும் பக்தர்கள் பலன் பெறுவார்கள். இந்த டெலிமெடிசின் முறையில் கூடுதலாக பல்வேறு நவீன வசதிகளும் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன” என்று தெரிவித்தனர்.
ஆந்திராவில் கடந்த 2006-ல் அப்போதைய முதல்வர் ராஜ சேகர ரெட்டியால் முதன்முதலில் டெலிமெடிஸின் வசதி தொடங்கப்பட்டது.
இந்த வசதி வெளிநாடுகளில் வளர்ந்த அளவுக்கு இன்னும் இந் தியாவில் வளரவில்லை. எனினும், இந்த வசதியை அப்போலோ உட்பட பல்வேறு பெருநிறுவனங் களும் அறிமுகப் படுத்தி உள்ளன.
வரும் காலத்தில் இந்த வகை மருத்துவம் பெரிய தொழில்துறையாக வளரும் என எதிர்பார்க்கப்படுகிறது.