

பெல்லாரி: தனது தாயார் தனக்காக சன்ஸ்கிரீன் அனுப்பி இருந்ததாகவும், ஆனால் அதை தான் பயன்படுத்துவது இல்லை எனவும் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அவர் தற்போது இந்திய ஒற்றுமை பயணத்தை மேற்கொண்டு வருகிறார். தமிழகம், கேரளாவை கடந்து இப்போது கர்நாடக மாநிலத்தில் யாத்திரை மேற்கொண்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. அதை முன்னிட்டு தனது நடைபயணத்தினூடே அவர் கர்நாடகாவின் பெல்லாரியில் தனது வாக்கை செலுத்தி இருந்தார். சுமார் 24 ஆண்டுகளுக்கு பின்னர் நேரு குடும்பத்தை சேர்ந்த ஒருவர் தலைவர் பதவிக்கு போட்டியிடாமல் உள்ளது இதுவே முதல்முறை.
இந்தப் பயணத்தின்போது கூடாரத்தில் இருந்தபடி உள்ளூரை சேர்ந்த நபர்களுடன் ராகுல் காந்தி பேசியிருந்தார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது ஒருவர், ‘நீங்கள் என்ன சன்ஸ்கிரீனை பயன்படுத்தி வருகிறீர்கள்?’ என கேட்டார்.
“நான் சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது இல்லை. என அம்மா சன்ஸ்கிரீன் அனுப்பி இருந்தார். ஆனால், அதை நான் பயன்படுத்துவது இல்லை” என ராகுல் காந்தி தெரிவித்திருந்தார். ‘நீங்கள் சூரிய ஒளியை போல பிரகாசிக்கிறீர்கள்’ என அந்தக் கேள்வி கேட்ட நபர் சொல்லி இருந்தார்.
ஒரு எதிர்க்கட்சியாக தாங்கள் பணியாற்றி வருவதாகவும், மக்களை நேரடியாக சந்திப்பது அவசியம் எனவும் ராகுல் காந்தி தெரிவித்தார்.