புதிய வகை கரோனா பரவல் - இந்தியாவுக்கு அச்சுறுத்தல்

புதிய வகை கரோனா பரவல் - இந்தியாவுக்கு அச்சுறுத்தல்
Updated on
1 min read

புதுடெல்லி: இந்தியாவில் தற்போது புதிய வகை கரோனா பரவல் மீண்டும் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக மாறியுள்ளது. முதன் முதலில் பிஎப்.7 வகை கரோனா வைரஸ் சீனாவில்தான் அண்மையில் கண்டறியப்பட்டது. அதன்பின்பு, அமெரிக்கா, பிரிட் டன், ஆஸ்திரேலியா, பெல்ஜியம் நாடுகளுக்கும் பரவியது.

இந்நிலையில், குஜராத் பயோடெக்னாலஜி ஆய்வு மையம் நடத்திய சோதனையில் இந்தியா விலும் பிஎப்.7 வகை கரோனா பாதிப்பு இருப்பதை முதன் முதலாககண்டறிந்து உறுதி செய்துள்ளது.

சீனாவின் மங்கோலியா பிராந்தியத்தில் உருவாகி உலகின் பிற பகுதிகளுக்கு பரவிய பிறகு ஒமைக்ரானின் புதிய உட்பிரிவு வகையான பிஏ5.1.7 கரோனா வைரஸ் அதிகம் பரவும் தன்மை கொண்டதாகவும், தொற்றை ஏற்படுத்தக் கூடியதாகவும் உருமாற்றம் கண்டுள்ளது.

புதிய பிஎப்.7 வகை கரோனா வைரஸ் வடமேற்கு சீனாவில்தான் முதல் முதலாக கண்டறியப்பட்டது. இதுகுறித்து வடக்கு சீனாவின் ஷாங்டோங் மாகாண அதிகாரிகள் கூறுகையில். “அக்டோபர் 4-ம் தேதியிலிருந்து மாகாணத்தின் பல பகுதிகளில் கரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதற்கு பிஎப்.7 புதிய வகை கரோனா வைரஸ் காரணமாக இருப்பது சோதனையில் தெரியவந்துள்ளது’’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in