Published : 25 Jul 2014 10:14 AM
Last Updated : 25 Jul 2014 10:14 AM

நீதிபதி நியமன விவகாரம் குறித்த வழக்கை விரைந்து விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

நீதிபதி அசோக்குமார் நியமனத்தில் மன்மோகன் சிங், பரத்வாஜ் ஆகியோரின் பங்கு குறித்து விசாரணை நடத்த கோரும் மனுவை விரைந்து விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது.

உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் எம்.எல்.சர்மா தொடர்ந்துள்ள மனுவில் கூறியிருப் பதாவது: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி யாக அசோக்குமார் நியமிக் கப்பட்டபோது, அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் நீட்டிப்பு வழங்கப்பட்டது என்று மார்கண் டேய கட்ஜூ குற்றம் சாட்டி உள்ளார்.

தலைமை நீதிபதியாக இருந்த கட்ஜூ எதிர்மறையாக அறிக்கை அளித்தும், மத்திய உளவுத்துறை எதிர்மறை அறிக்கை அளித்த நிலையிலும் எப்படி அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது என்ற விவரத்தை அளிக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.

இந்த விவகாரத்தின்போது பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கும், சட்டத்துறை அமைச்சராக இருந்த பரத்வாஜூம் குடியரசுத் தலைவருக்கு இந்த தகவலை ஏன் தெரிவிக்கவில்லை என்பது குறித்து விசாரணைக்கு உத்தர விட வேண்டும். அப்படி தகவல் தெரிவிக்காதது, இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் ஊழல் தடுப்புச் சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.

நீதிபதி அசோக்குமார் நியமன விவகாரம் நீதித்துறையின் சுதந்திரத்தின்மீது தாக்குதல் நடத்த பயன்படுத்தப்படுகிறது. இதன்மூலம், தற்போதுள்ள ‘கொலீஜியம்’முறையை மாற்றி தேசிய நீதிக்குழு (என்ஜேசி) அமைப்பை கொண்டு வர முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. அதில் மத்திய அரசு வெற்றிபெற்றால், அரசு தரப்பு ஆட்களே நீதிபதிகளாக வருவார்கள். அது நீதித்துறையின் சுதந்திரத்துக்கு ஆபத்தாக முடியும்.

எனவே, அசோக்குமார் நியமனம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சமர்ப் பிக்க உத்தரவிட வேண்டும். இனிமேல், அரசியல் கட்சிகளுடன் தொடர்புடைய எந்த வழக்கறிஞரும் நீதிபதியாக நியமிக்கப்படக் கூடாது. மூத்த வழக்கறிஞர்களை நீதிபதிகளாக நியமிக்கும் முன்பு, மத்திய உளவுத்துறையின் அறிக் கை பெற வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை அடுத்த வாரத்தில் விரைந்து விசாரிக்க வேண்டும் என்று நீதிபதிகள் எச்.எல்.தத்து, ஆர்.கே.அகர்வால், அருண் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வலியுறுத்தப்பட்டது. இக்கோரிக்கையை ஏற்க நீதிபதிகள் மறுத்து விட்டனர். வழக்கமான நடைமுறையின்படி இந்த மனு பட்டியலிடப்படும் என்று உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x