

ரூ.1000 500 நோட்டுகளுடன் கேரளாவில் மக்கள் வங்கிகள் முன்பாக பெரிய வரிசையில் நின்று கொண்டிருக்கின்றனர். ஒரு சில ஏடிஎம்-களே இயங்கியதால் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.
மேலும் 2 நாட்கள் கழித்து அனைத்து ஏ.டி.எம்.களும் இயங்கும் என்று அரசு அறிவித்தது பொய்த்துப் போக ஒரு சில ஏடிஎம்.களே திறக்கப்பட்டன, இதில் மக்கள் பெரும் அளவில் வந்து பணத்தை எடுத்துச் சென்றதால் அந்த ஏ.டி.எம்.களிலும் பணம் தீர்ந்து போனது.
இதனால் மக்களிடையே பதற்றமும் கோபமும் அதிகரித்துள்ளது. திறந்த ஏடிஎம்-களில் ஒரு சில மணிநேரங்களிலேயே பணம் தீர்ந்து போனது. இதனையடுத்து கேரளாவில் மக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் ஏடிஎம்.களில் பணம் தீர்ந்து போனதால் வங்கிகளில் கூடுதல் கவுண்ட்டர்கள் திறக்கப்பட்டும் மக்கள் பெரிய அளவில் அங்கு குழுமி வருகின்றனர்.
நாடு முழுதுமே சில ஏ.டி.எம்.களே திறந்ததால் அங்கு பணம் விரைவில் தீர்ந்தது, இந்த ரூ.500, ரூ.1000 திட்டம் ஒரு பெரிய அளவில் மக்களிடையே பதற்றத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தி வருகிறது, காரணம் அரசு கூறியது எதுவும் நடக்கவில்லை என்பதுதான் மக்களின் கோபாவேசத்தை பெரிய அளவில் கிளறி விடும் என்று கேரள கம்யூனிஸ்ட்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.