

புதுடெல்லி: இந்திய கடற்படையின் பயன்பாட்டுக்காக நீர்மூழ்கி கப்பல்களில் இருந்து ஏவப்படும் அதிவேக ஏவுகணை(எஸ்எல்பிஎம்) உருவாக்கப்பட்டது.
இதை அணுசக்தி ஏவுகணைகளை ஏவும் திறன்படைத்த ஐஎன்எஸ் அரிஹந்த் என்ற நீர்மூழ்கி கப்பலில் இருந்து பரிசோதிக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. ஐஎன்எஸ் அரிஹந்த் நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவப்பட்ட எஸ்எல்பிஎம் ஏவுகணை, சிறப்பாக செயல்பட்டு இலக்கை துல்லியமாக தாக்கி அழித்தது. இது குறித்து பாதுகாப்பு அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில், ‘இந்த சோதனை இந்தியாவின் அணு ஏவுகணை திட்டத்தில் மிக முக்கியமான அம்சமாகும். தாக்குதல் திறனை எஸ்எல்பிஎம் ஏவுகணை உறுதி செய்துள்ளது’’ என்று தெரிவித்துள்ளது.