உத்தர பிரதேசத்தில் மின் வாகனங்களுக்கு சலுகைகள் அறிவிப்பு

உத்தர பிரதேசத்தில் மின் வாகனங்களுக்கு சலுகைகள் அறிவிப்பு
Updated on
1 min read

லக்னோ: உத்தர பிரதேச அரசு மின்சார வாகன உற்பத்தி மற்றும் இயக்கக் கொள்கையை வெளியிட்டுள்ளது. அதில், மின்சாரத்தில் இயங்கும் இரு சக்கர வாகனம், மூன்று சக்கர வாகனம், கார்கள், பேருந்துகள் மற்றும் வர்த்தக வாகனங்களை வாங்குபவர்கள் பதிவுக் கட்டணம் மற்றும் சாலை வரி செலுத்துவதிலிருந்து 100 சதவீத விலக்குகள் அளிக்கப்பட்டுள்ளன.

அதுமட்டுமின்றி இத்தகைய வாகனங்களின் விலையில் மானியங்களும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளன.

மின்சார இருசக்கரங்களுக்கு ரூ.5,000 வரை மற்ற வாகனங்களுக்கு ரூ.50,000 வரை மானியம் வழங்கப்படும் என்று புதிய கொள்கையில் அரசு தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in