

டேராடூன்: உத்தராகண்டில் உள்ள கேதார்நாத், பத்ரிநாத் கோயில்களுக்கு பிரதமர் மோடி, தீபாவளிக்கு முன் அக்டோபர் 21-ம் தேதி செல்லவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமரின் பயணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.
எனினும் பிரதமர் மோடியின் வருகைக்காக ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் தொடங்கியுள்ளது. இமயமலையில் உள்ள இக்கோயில்களில் பிரதமர் வழிபாடு செய்வதுடன் அங்கு நடைபெறும் மேம்பாட்டுப் பணிகளை அவர் ஆய்வு செய்ய உள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.