

மாபெரும் நிர்வாக சீர்கேட்டுக்கு 10 ஆண்டுகள் தலைமை தாங்கியவர் மன்மோகன் சிங் என மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு விமர்சித்திருக்கிறார்.
மாநிலங்களவையில் இன்று (வியாழக்கிழமை) நோட்டு நடவடிக்கை மீது விவாதம் நடைபெற்றது. காங்கிரஸ் சார்பில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விவாதத்தை துவக்கினார்.
அப்போது அவர், "ரூ.500, 1000 செல்லாது என்ற நடவடிக்கையை மத்திய அரசு அமல்படுத்திய விதம் மாபெரும் நிர்வாகத் தோல்வியின் அடையாளம்" எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில், இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த வெங்கய்ய நாயுடு, "மாபெரும் நிர்வாக சீர்கேட்டுக்கு 10 ஆண்டுகள் தலைமை தாங்கியவர் மன்மோகன் சிங். அவர் இப்போது பாஜக மீது நிர்வாக சீர்கேட்டு புகாரை முன்வைப்பது முரணானது" என்று குறிப்பிட்டுள்ளார்.