நக்சல் தொடர்பு வழக்கு | முன்னாள் பேராசிரியர் சாய்பாபா விடுவிப்பு

முன்னாள் பேராசிரியர் சாய்பாபா
முன்னாள் பேராசிரியர் சாய்பாபா
Updated on
1 min read

நாக்பூர்: மாவோயிஸ்டுகளுடன் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்பட்டு பணியிலிருந்து நீக்கப்பட்டு ஆயுதப் பரவல் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட டெல்லி பல்கலைக்கழக் பேராசிரியர் ஜி.என்.சாய்பாபாவை அந்த வழக்கிலிருந்து விடுவித்து உத்தரவிட்டுள்ளது மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை. நீதிபதிகள் ரோஹித் தியோ, அனில் பன்சாரே அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. சாய்பாபாவை உடனடியாக சிறையிலிருந்து விடுவிக்கும்படி உத்தரவிட்டுள்ளது.

பேராசிரியர் சாய்பாபா மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக குற்றம்சாட்டப்பட்டு 2014-ம் ஆண்டு மே-மாதம் கைது செய்யப்பட்டார். அதாவது போலீஸ் தகவல்களின் படி, நக்சல் தலைவர்களுடன் சாய்பாபா தொடர்பு வைத்திருந்தார் என்றும் குறிப்பாக தலைவர் முப்பல்ல லஷ்மண ராவ் என்பவருடன் தொடர்ச்சியாக தகவல் பரிமாற்றத்தில் இருந்ததாகவும் கூறப்பட்டது. ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் ஹேம் மிஸ்ராவைக் கைது செய்து விசாரித்த போது சாய்பாபாவுக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே தான் தூது சென்றதாகக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இந்த வழக்கிலிருந்து பேராசிரியர் சாய்பாபா விடுவிக்கப்பட்டுள்ளார். அவருடன் கைதான மேலும் 4 பேரும் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர். சாய்பாபா தற்போது நாக்பூர் சிறையில் உள்ளார். உடல்நலக் குறைவு காரணமாக அவர் வீல் சேரில் தான் இருக்கிறார். இந்நிலையில் அவரது உடல்நலனைக் கருத்தில் கொண்டு நாக்பூர் கிளை அவரை விடுவித்துள்ளது. சாய்பாபாவுடன் பத்திரிகையாளர் ஒருவர், மாணவர் ஒருவர் உள்பட 6 பேர் கைதாகினர். இதில் ஒருவர் உயிரிழந்துவிட்டார். மற்ற 5 பேரும் இன்று வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in