

ரிசர்வ் வங்கி மற்ற பிற வங்கிகளுக்கு ஒரே சீராக நியாயமான முறையில் பண விநியோகம் செய்கிறதா என டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளருமான அர்விந்த் கேஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.
ரூ.500, 1000 பண மதிப்பை நீக்கப்படுவதாக பிரதமர் மோடி கடந்த 8-ம் தேதி அறிவித்தார். இந்நிலையில், ரிசர்வ் வங்கி மற்ற பிற வங்கிகளுக்கு ஒரே சீராக நியாயமான முறையில் பண விநியோகம் செய்கிறதா என கேஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.
அண்மையில், பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பின்னர் ரிசர்வ் வங்கி ஒரு குறிப்பிட்ட வங்கிக்கு ரூ.42 லட்சம் பணம் விநியோகம் செய்திருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. அந்த வங்கிக்கு வெறும் 4,000 வாடிக்கையாளர்களே இருக்கின்றனர் என்றும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதேவேளையில், 1.5 லட்சம் வாடிக்கையாளர்களுடன் 35 கிளைகள் கொண்ட ஒரு வங்கிக்கு வெறும் ரூ.3 லட்சம் மட்டுமே ரிசர்வ் வங்கி விநியோகித்துள்ளது என்றும் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இவற்றைச் சுட்டிக்காட்டிய கேஜ்ரிவால், "ரிசர்வ் வங்கி மற்ற பிற வங்கிகளுக்கு ஒரே சீராக நியாயமான முறையில் பண விநியோகம் செய்கிறதா?" என கேள்வி எழுப்பினார்.