

பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக இன்று ஹைதராபாத் வருகிறார்.
ஹைதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமியில் நாளை அனைத்து மாநில டிஜிபிக்களின் மாநாடு நடைபெற உள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளார்.
இதற்காக அவர் இன்று மாலை டெல்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் ஹைதராபாத் வருகிறார்.
அவருடன் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இணை அமைச்சர்கள் கிரண் ரிஜுஜு, ஹன்ஸ்ராஜ் கங்கராம், தேதிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் ரா, ஐபி துறை உயர் அதிகாரிகள் வருகின்றனர்.