ஏடிஎம்களில் பணம் நிரப்ப ரூ.1.37 கோடியுடன் சென்ற வேன் மாயம்: பெங்களூருவில் அதிர்ச்சி

ஏடிஎம்களில் பணம் நிரப்ப ரூ.1.37 கோடியுடன் சென்ற வேன் மாயம்: பெங்களூருவில் அதிர்ச்சி
Updated on
1 min read

பெங்களூருவில் ரூ.1.37 கோடி ரொக்கத்துடன் வங்கி ஏடிஎம்களில் பணம் நிரப்பச் சென்ற வேன் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

பேங்க் ஆப் இந்தியா வங்கியிலிருந்து ரூ.1.37 கோடி ரொக்கத்துடன் ஏடிஎம்.களில் பணம் நிரப்ப வேன் இன்று மதியம் புறப்பட்டது. கெம்பகவுடா சாலைக்குச் சென்று ஏடிஎம்களில் பணம் நிரப்பச் சென்ற வேன் மதியம் 2 மணியளவில் மாயமானது.

வேன் ஓட்டுநர் லோகி-கேஷ் செக்யூரிட்டி ஏஜென்சியின் ஒப்பந்த ஊழியர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஓட்டுநரே வேனை கடத்திச் சென்றாரா, அல்லது கடத்தலின் பின்னணியில் வேறொரு கும்பல் உள்ளதா என்று பல்வேறு கோணங்களில் போலீஸார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in