

ஸ்வைப் மெஷினை பயன்படுத்தி போக்குவரத்து அபராதக் கட்டணங்களை வசூலித்து வருகின்றனர் நாசிக் போக்குவரத்து காவல் துறையினர்.
ரூபாய் நோட்டு செல்லாது நடவடிக்கையினால் ஸ்வைப் மெஷின் மூலம் போக்குவரத்து அபராதக் கட்டணங்களை வசூலிக்கும் முறையை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவுடன் இணைந்து செயல்படுத்தி வருகிறது நாசிக் போக்குவரத்துக் காவல்துறை.
இது குறித்து நாசிக் காவல் துணை ஆணையர் விஜய் பாட்டீல் கூறும்போது, "நாசிக் நகரில் மிக முக்கியமான 12 இடங்களில் ஸ்வைப் மெஷின் மூலம் போக்குவரத்து அபராதக் கட்டணங்கள் ஸ்வைப் மெஷின் மூலம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
வரும் நாட்களில் ஸ்வைப் மெஷின் மூலம் அபராதம் வசூலிக்கப்படும் இடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படலாம். இந்தப் புதிய நடவடிக்கை போக்குவரத்துக் காவல்துறை அமைப்பில் வெளிப்படைத் தன்மையை உருவாக்கியுள்ளது" என்று கூறினார்.