

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நேற்று விருது வழங்கும் விழா ஒன்றில் பங்கேற்க வந்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன (இஸ்ரோ) தலைவர் ஏ.எஸ்.கிரண் குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சந்திராயன்-2 திட்டத்தின் ஒரு பகுதியாக, லேண்டர் உபகரணம் பாதுகாப்பாக சந்திரனில் தரை யிறங்குவதை உறுதி செய்வதற் கான சோதனைகள், கர்நாடக மாநிலம், சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள சல்லகெரேவில் இஸ்ரோ வளாகத்தில் நடத்தப்பட்டு வருகிறது.
இதற்காக, சந்திரனின் மேற் பரப்பை போன்ற அமைப்பு சல்லகெரே வளாகத்தில் வடி வமைக்கப்பட்டுள்ளது. சந்திர னில் காணப்படுவது போல, ஏராளமான பள்ளங்கள் அங்கு உருவாக்கப்பட்டுள்ளன.
சந்திராயன் 2 செயற்கை கோளின் லேண்டர் உபகரணம் சந்திரனில் தரையிறங்கும் போது, இந்த பள்ளங்களில் சிக்கிச் சேதம் அடைவதைத் தவிர்க்க வேண்டும். இதற்காக லேண்டர் போன்ற உபகரணங்களை, ஹெலிகாப்டரில் கட்டி, இவற்றின் மீது பறக்கவிட்டு சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு கிரண் கூறினார்.
சந்திராயன்-1 திட்டத்தைத் தொடர்ந்து, அதன் அடுத்த கட்ட மாக கூடுதல் சிறப்பு அம்சங் களுடன் சந்திராயன்-2 திட்டத்தை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. இதற்கான செயற்கைக்கோள் 2017 அல்லது 2018-ம் ஆண்டுக்குள் விண்ணில் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.