

லட்சக்கணக்கான மக்கள், தொழி லாளர்கள் வங்கிகளில் காத்திருக் கின்றனர். இதுவா பிரதமர் மோடி யின் நல்லாட்சி என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்திருப்பதால் அந்த நோட்டுகளை மாற்ற வங்கிகளில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் நேற்று ட்விட்டரில் கூறியிருப்பதாவது:
பழைய நோட்டுகளை மாற்ற கோடிக்கணக்கான மக்கள், தொழி லாளர்கள் வங்கிகளில் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். அதேநேரம் சில ஆயிரம் பணக் காரர்கள் மட்டுமே வங்கிகள் முன்பு வரிசையில் நிற்கின்றனர். பொதுமக்கள், தொழிலாளர்கள் வங்கிகள் முன்பு மணிக்கணக்கில் காத்திருந்தால் உற்பத்தி என்ன ஆகும். இதுதான் பிரதமர் மோடியின் நல்லாட்சியா என்று சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாஜக கருத்து
பாஜக தேசிய செயலாளர் காந்த் சர்மா கூறும்போது, “கறுப்பு பணத்தை ஒழிக்க பிரதமர் மோடி சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடவடிக்கையை தொடங்கியுள் ளார். இதனால் சமானிய மக்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ள னர் என்பது உண்மை. ஆனால் ஒட்டுமொத்த நாடும் அரசுக்கு ஆதரவாக உள்ளது. பிரதமர் மோடியின் கறுப்பு பண ஒழிப்பு நடவடிக்கையால் அதிருப்தி அடைந்துள்ள எதிர்க்கட்சிகள் ஆளும் கட்சி மீது சேற்றை வாரி யிறைத்து வருகிறது” என்றார்.