லக்னோவில் மோடியின் டிச. 24 பிரச்சாரம் ஒத்திவைப்பு: ரூபாய் நோட்டு வாபஸ் விவகாரம் எதிரொலி?

லக்னோவில் மோடியின் டிச. 24 பிரச்சாரம் ஒத்திவைப்பு: ரூபாய் நோட்டு வாபஸ் விவகாரம் எதிரொலி?
Updated on
1 min read

உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவில் டிசம்பர் 24-ம் தேதி நடைபெறவிருந்த பிரதமர் மோடியின் மாபெரும் பொதுக் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ரூபாய் நோட்டு வாபஸ் விவ காரத்தால் இக்கூட்டம் தள்ளி வைக் கப்பட்டதாக கூறப்படுகிறது.

உ.பி.யில் இன்னும் ஓரிரு மாதங்களில் தேர்தல் நடைபெற வுள்ள நிலையில், அங்கு பாரதிய ஜனதா தனது பிரச்சாரத்தை ஏற்கெனவே தொடங்கிவிட்டது. மாற்றத்துக்கான கூட்டம் என்ற பெயரில் கடந்த நவம்பர் 5-ம் தேதி பிரதமர் மோடியின் கூட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டன. காஜிபூர் மற்றும் ஆக்ராவில் இந்தக் கூட்டங்கள் நடைபெற்றன. இதை யடுத்து லக்னோவில் வரும் டிசம்பர் 24-ம் தேதி பிரம்மாண்ட கூட்டம் நடத்தமுடிவு செய்யப்பட்டது.

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் தொடர்ந்து 4 முறை எம்.பி.யாக இருந்த தொகுதி இது. இத்துடன் டிசம்பர் 24-ல் அவரது பிறந்த நாளையும் லக்னோவில் கொண்டாடும் வகையில் இக்கூட்டம் திட்டமிடப் பட்டது. இந்நிலையில் இந்தக் கூட்டம் திடீரென ஒத்தி வைக் கப்பட்டுள்ளது. ரூபாய் நோட்டு வாபஸ் விவகாரத்தால் மக்கள் கூட்டம் வராது என கருதிய தால் இக்கூட்டம் தள்ளி வைக்கப் பட்டதாக கூறப்படுகிறது.

லக்னோ, மாநிலத் தலைநகரமாக இருப்பதால், மற்ற இடங்களைக் காட்டிலும் அதிக மக்களை திரட்ட பாஜகவினர் திட்டமிட்டிருந்தனர். ஆனால் ரூபாய் நோட்டுகளை மாற்றுவதில் மக்கள் தீவிரமாக இருப்பதால், எதிர்பார்க்கும் அள வுக்கு மக்கள் வர மாட்டார்கள் என கட்சித் தலைமை கருதுகிறது. இதில் எதிர்க்கட்சிகள் ஆதாயம் தேடத் தொடங்கி விடுவார்கள் என்ப தால், கூட்டத்தை ஒத்தி வைக்க டெல்லி தலைமையகம் உத்தரவிட் டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் உ.பி. பாஜக தலைமை செய்தித் தொடர்பாளர் ஹிர்தய நாரயண தீட்ஷித் கூறும் போது, “ரூபாய் நோட்டு விவகாரத்தால் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டதாக கூறுவது தவறு. பிரதமர் துணிச்சலான முடிவு எடுத்துள்ளதாக மக்கள் பாராட்டி வருகின்றனர். வாக்குச்சாவடி அளவில் கட்சித் தொண்டர்களை இங்கு வரவழைக்க அவகாசம் வேண்டும் என்பதால் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது” என்றார்.

இந்தக் கூட்டத்தின் மறுதேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. எனினும் ஜனவரி 3-ல் இக்கூட்டம் நடைபெறலாம் என எதிர்பார்க்கப் படுகிறது. அதேசமயம் டிசம்பர் 24 கூட்டத்துக்கு பதிலாக மத்திய அமைச்சர்களின் பிரச்சார ஊர்வலம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற் கிடையே, நவம்பர் 27 முதல் டிசம்பர் 18 வரை உ.பி.யின் குஷி நகர், முராதாபாத், பைரைச், கான்பூர் ஆகிய இடங்களில் பிரதமர் பங்கேற்கும் கூட்டங்கள் நடைபெற உள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in