பிரதமரின் திறன் இந்தியா திட்டத்தின் கீழ் 280 இடங்களில் தொழிற்பயிற்சி மேளா

பிரதமரின் திறன் இந்தியா திட்டத்தின் கீழ் 280 இடங்களில் தொழிற்பயிற்சி மேளா
Updated on
1 min read

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் திறன் இந்தியா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 280 இடங்களில் தேசிய தொழிற்பயிற்சி மேளா நேற்று நடைபெற்றது.

நாடு முழுவதும் தொழில் வாய்ப்புகள் மற்றும் தொழில் நேரடி செயல் முறை பயிற்சிகளை ஊக்குவிக்க திறன் இந்தியா திட்டத்தை (ஸ்கில் இந்தியா மிஷன்) பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி உள்ளார்.

இந்த திட்டத்தின் கீழ் நாடு முழுவதுமுள்ள பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் திறன்மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அதன் ஒரு பகுதியாக, திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம் நாடு முழுவதும் 280 இடங்களில் தொழில் பயிற்சி மேளாவுக்கு நேற்று ஏற்பாடு செய்தது. பயிற்சிகள் மூலம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்க உள்ளூர் வணிக நிறுவனங்கள் இந்த மேளாக்களில் பங்கேற்றன.

இந்த மேளாவில் தேர்வு செய்யப்படுவோருக்கு புதிய திறன் பயிற்சிகளை பெறுவதற்காக மாதாந்திர உதவித் தொகையினை மத்திய அரசு வழங்கும் என திறன் மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வேலைவாய்ப்பினை அதிகரிக்க ஒவ்வொரு மாதமும் இரண்டாவது திங்கள்கிழமை இந்த தொழில் பயிற்சி மேளா நாடு முழுவதும் நடத்தப்படும். இதில் பங்கேற்கும் இளைஞர்கள் ஆயிரக்கணக்கானோர் நேரடி திறன் பயிற்சியும் வேலைவாய்ப்பும் பெற்று வருகின்றனர் என அந்த அமைச்சகம் மேலும் கூறியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in