

உத்தரப் பிரதேச மாநிலம் காஸியாபாத் மாவட்டத்தில் இயங்கி வரும் ஆடை தயாரிப்பு தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 13 தொழிலாளர்கள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
காஸியாபாத் மாவட்டம், சஹிபாபாத்தில் உள்ள ஷாஹித் நகரில் ஆடை தயாரிப்பு தொழிற் சாலை இயங்கி வருகிறது. இந்தத் தொழிற்சாலையின் தரைதளத்தில் நேற்று திடீரென மின்கசிவு ஏற்பட்டதில், அதில் இருந்து உருவான தீப்பொறி, துணிகள் மீது பற்றி கொழுந்துவிட்டு எரிந்தது. இதனால் பதறிப் போன ஊழியர் கள், உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அங்குமிங்கும் அலைந்த னர். ஆனால் ஊழியர்கள் தப்பிச் செல்லாதவாறு அங்கிருந்த குறுகலான நுழைவாயிலிலும் தீ பரவியது. எனினும் ஒரு சில ஊழியர்கள் துணிச்சலாக தப்பி வெளியே வந்தனர்.
எனினும் 20-க்கும் மேற்பட்டோர் வெளியே வர முடியாமல் தவித்தனர். அதற்குள் மற்றப் பகுதிகளுக்கும் தீ மளமளவென பரவியதில் 13 ஊழியர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். எஞ்சியவர்கள் பலத்த காயங்களுடன் அங்கிருந்து தப்பி வெளியே வந்தனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
‘‘இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட் டுள்ளது. தொழிற்சாலையில் பாது காப்பு குறைபாடுகள் ஏதேனும் உள்ளதா என்பது குறித்து அதன் உரிமையாளரான ரிஸ்வானிடமும் விசாரணை நடத்தி வருகிறோம்” என காஸியாபாத் மாவட்ட எஸ்.பி சல்மான் தாஜ் பாட்டீல் தெரிவித்தார்.