ராணுவ வீரர்கள் 11 பேர் பலி: பாகிஸ்தான் தகவலுக்கு இந்திய ராணுவம் மறுப்பு

ராணுவ வீரர்கள் 11 பேர் பலி: பாகிஸ்தான் தகவலுக்கு இந்திய ராணுவம் மறுப்பு
Updated on
1 min read

இந்திய வீரர்கள் 11 பேர் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் கூறுவதில் உண்மையில்லை என இந்திய ராணுவம் மறுத்துள்ளது.

இது தொடர்பாக மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் கூறும்போது, "நவம்பர் 14, 15, 16 ஆகிய தினங்களில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் இந்திய தரப்பில் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. பாகிஸ்தான் ராணுவம் கூறுவதில் உண்மை இல்லை" என்று கூறினார்.

முன்னதாக பாகிஸ்தான் ராணுவத் தலைமை அதிகாரி ரஹீல் ஷெரீப் புதன்கிழமை பேசும்போது, "இந்திய ராணுவத்தால் பாகிஸ்தான் வீரர்கள் ஏழு பேர் கொல்லப்பட்ட அதே தினத்தில், இந்தியா ராணுவ வீரர்கள் 11 பேரை எங்களது ராணுவம் கொன்றது.

மேலும் இந்திய ராணுவத்துடன் நடந்த சண்டையில் இதுவரை 40 – 44 இந்திய வீரர்களை பாகிஸ்தான் ராணுவம் கொன்றுள்ளது. ஆனால் இதனை இந்திய ராணுவம் ஏற்க மறுக்கிறது. இந்திய ராணுவம் தனது தோல்வியை ஏற்றுக் கொள்ள வேண்டும்" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in