

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பவுராவ் சோனாவானே. நகராட்சி துப்புரவுத் தொழிலாளியான இவர் பாரத ஸ்டேட் வங்கியிடம் (எஸ்பிஐ) இருந்து ரூ.1.5 லட்சம் கடன் பெற்றிருந்தார்.
இதுகுறித்து அவர் கூறும் போது, ‘‘மல்லையா உட்பட 63 பேர் வாங்கிய கடனை தள்ளுபடி செய்த முடிவு மிகவும் வரவேற்கத்தக்கது. இதே போல் எனது கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என எஸ்பிஐ வங்கிக்கு கடிதம் அனுப்பினேன்.
திடீர் நோய்வாய்ப்பட்ட எனது மகனை காப்பாற்ற, இந்த கடனை வாங்கியிருந்தேன் எனவும் கடிதத் தில் விளக்கியிருந்தேன். ஆனால் இதுவரை வங்கி அதிகாரியிடம் இருந்து எந்த பதிலும் கிடைக்க வில்லை’’ என்றார்.